திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

திருப்பரங்குன்றம், ஜன.18: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முதல்படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடந்த 8ம் தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவையொட்டி தினமும் காலையில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடன் தங்கச்சப்பரத்திலும், மாலையில் பூத வாகனம், அன்ன வாகனம், புஷ்ப சப்பரம், மயில் வாகனம், ரத்தின சிம்மாசனம், பச்சை குதிரை வாகனம் ஆகியவற்றில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று காலை 10.30  மணியளவில் நடைபெற்றது. அப்போது சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளி, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை வலம் வந்தனர். நேற்று மாலை சுவாமி தெப்பத்தை வலம் வந்து தங்ககுதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பின்னர் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.   விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்(பொறுப்பு) கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: