பாராளுமன்ற தேர்தல் எதிரொலி மே வரை குடிநீர் இருப்புக்காக பாசனத்துக்கு பாதியில் கைவிரிப்பு

à  பால் பிடிக்கும் பருவத்தில் நெற்பயிர் கருகுகிறது

à  லாரி தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றும் அவலம்
Advertising
Advertising

மதுரை, ஜன. 18:   ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மே வரை அணைகளில் குடிநீர் இருப்பு வைக்க திட்டமிட்டு பாசனத்துக்கு பாதியில் கை விரிப்பதாக புகார் எழுந்துள்ளது. தண்ணீரின்றி நெற்கதிர் பால் பிடிக்கும் பருவத்தில் வாடுகிறது. லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.முல்லை பெரியாறு, வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்போது, 120 நாள் வழங்க முடியுமா? மே இறுதி வரை குடிநீர் மற்றும் சித்திரை திருவிழாவுக்கு வைகை ஆற்றில் திறக்க தேவையான ஒதுக்கீடு ஆகியவை ஆய்வு கணக்கிடப்படும். அந்த அளவுக்கு அணைகளில் இருப்பு வைத்து தான் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது விதிமுறையாகும். அதன்படி கணக்கிட்டு தான் மதுரை மாவட்டத்திலுள்ள பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அைத நம்பி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவிட்டு நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். 80 நாட்களே முடிந்துள்ள நிலையில் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் பாசனத்துக்கு திறக்கும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக கடைமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேரவில்லை. வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கும் தண்ணீர் கடந்த 13ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் நெற்பயிரிலுள்ள கதிர் பால் பிடிக்கும் பருவத்தில் கருகுகிறது. இதனை காக்க ஒரு லாரி தண்ணீர் ரூ.1400 முதல் ரூ.1500 வரை விலை கொடுத்து ஊற்றும் அவல நிலை நிலவுகிறது. அருகில் பம்புசெட் கிணறு இருந்தால் ஒரு மணி நேரத்துக்கு கணக்கிட்டு விலை கொடுக்கின்றனர். இதனால் கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பாசனத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை பாதியில் நிறுத்துவது ஏன்? என்று விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:அணைகளில் தண்ணீர் இருப்பு வைத்து விதிமுறைகளின்படி தான் அரசு உத்தரவின்படி பாசனத்துக்கு  தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வடக்கு கிழக்கு பருவமழை 40 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. மே இறுதி வரை குடிநீருக்கு இருப்பு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

மே இறுதி வரை அதாவது இன்னும் 5 மாதங்களுக்கு தேவையான குடிநீர் அணைகளில் இருப்பு வைக்க வேண்டும். சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். எனவே பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளைந்து அறுவடையும் நடக்கிறது. குறிபிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இன்னும் எத்தனை நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியும் என ஆய்வு செய்து வருகிறோம்.  இவ்வாறு தெரிவித்தார்.கஜா புயலுக்கு பின் மழை இல்லைநேற்றைய நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 119.25 அடியாக சரிந்தது. 156 கன அடி நீர்வருகிறது. 467 கன அடி திறக்கப்படுகிறது. வைகை அணையில் 56.17 அடி உள்ளது. 156 கன அடி நீர் வருகிறது. இங்கிருந்து குடிநீருக்கு மட்டும் 60 கன அடி வெளியேற்றப்படுகிறது. கஜா புயலுக்கு பிறகு வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியது.

Related Stories: