×

குடிநீர் குழாய் உடைப்பு அதிகாரிகள் அலட்சியம்

தொண்டி, ஜன. 18: தொண்டி அருகே உள்ள நம்புதாளை, முகிழ்த்தகம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு செல்லும் குடி தண்ணீர் குழாய் பல மாதங்களாக உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்புதாளை ஊராட்சி மற்றும் முகிழ்த்தகம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலியக்குடி, எம்.வி.பட்டினம் உள்ளிட்ட பகுதியில் கடுமையாக குடிநீர் பிரச்னை உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது. இது இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் டேங்கர் தண்ணீரையே அதிகம் பணம் கொடுத்து வாங்குகின்றனர்.இந்நிலையில் இப்பகுதிக்கு காவிரி கூட்டுக்குடி நீர் மற்றும் வழக்கமாக ஊராட்சிக்கு வரும் குடிநீர் குழாய் கிழக்கு கடைகரை சாலையில் தொண்டி செக்போஸ்ட் அருகே உடைந்து பல நாட்களாக வீணாக ஓடிக்கொண்டிருக்சிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்படுவது ஊராட்சி மக்கள் மட்டுமே. அதனால் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தமுமுக தலைவர் காதர் கூறுகையில், ‘காவிரி தண்ணீர் மற்றும் ரெகுலர் தண்ணீர் ஒரே குழாய் முலமே ஊராட்சி பகுதிக்கு செல்கிறது. இந்த குடிநீர் குழாய் செக் போஸ்ட் அருகே தனியார் விடுதியின் முன்பு உடைந்து உள்ளது. இதிலிருந்து வெளியாகும் தண்ணீர் அருகில் உள்ள குளத்தில் சேர்கிறது. நம்புதாளை ஊராட்சி மக்கள் தண்ணீர் கிடைக்கமால் கஷ்டப்படுகின்றனர். அதனால் அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’‘ என்றார்.

Tags : Drinking water pipeline officials ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை