×

தொண்டி அருகே தர்ஹாவில் கந்தூரி விழா

தொண்டி, ஜன. 18: தொண்டி அருகே சோலியக்குடியில் உள்ள மகான் செய்யது முகம்மது ஒலியுள்ளா தர்ஹா கந்தூரி விழா நேற்று நடைபெற்றது.
மகான் செய்யது முகம்மது ஒலியுள்ளா தர்ஹா 93வது கந்தூரி விழா சோலியக்குடியில் நடைபெற்றது. கடந்த காலங்களில் மனிதர்கள் மிகவும் உயரமாக இருந்ததாகவும் காலப்போக்கில் அவர்களின் உயரம் படிப்படியாக குறைந்து உள்ளதாகவும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த தர்ஹாவில் உள்ள கப்ருஸ்தான் (அடக்கஸ்தலம்) 40 அடி நீளம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் இங்கு மட்டுமே இவ்வளவு நீளமான சமாதி உள்ளது குறிப்பிடதக்கது.
இந்த தர்ஹாவின் கந்தூரியை முன்னிட்டு கடந்த 7ம் தேதி கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சிறப்பு தொழுகை மற்றும் பாத்தியா ஓதப்பட்டது. நேற்று இரவு முக்கிய நிகழ்வான கந்தூரி விழா நடைபெற்றது. முன்னதாக கிராம மக்கள் அனைவருக்கும் நேர்சை வழங்ப்பட்டது. வரும் 27ம் தேதி கொடி இறக்கம் நடைபெறும். ஜமாத் தலைவர், நிர்வாகிகள் உட்பட் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

Tags : festival ,Dhora ,Thondi ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!