செம்பட்டி வழி பாதயாத்திரையில் சிரமம்

செம்பட்டி, ஜன. 18: பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக தினந்தோறும் நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் செம்பட்டி, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் வழியாக பழநி செல்வர்.இவ்வழித்தடங்களில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சாலையோரம் குடிநீர், தெருவிளக்கு, குளியல் அறை, கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கொடைரோடு அடுத்த நாகையகவுண்டன்பட்டியில் இருந்து சக்கையநாயக்கனூர் வரை உள்ள சாலைகள் ஒருபுறம் தோண்டப்பட்டு அதன் பணிகள் முடியாமல் உள்ளது. இதேபோல் செம்பட்டி- பழநி ரோடு எஸ். பாறைப்பட்டி அருகே சாலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் இருப்பதால் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

மேலும் பெண் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி போதியளவு ஏற்படுத்தி தரவில்லை என்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் நாட்களில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இரவில் வழிப்பறி அச்சம் இருப்பதால் கூடுதல் போலீசாரை ரோந்துப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: