இளவரசி ஊரில் குளிர் குறைந்தது

கொடைக்கானல், ஜன. 18: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக கடும் குளிர்வாட்டி வதைத்தது. 24 டிகிரி முதல் 1 டிகிரி வரை வெப்பநிலை குறைந்தது. சில பகுதிகளில் 0 டிகிரி வெப்பநிலை குறைந்து கடும் உறைபனி காணப்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும் பலருக்கும் உடல்நலனும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் குளிரின் தாக்கம் தற்போது குறைய துவங்கி உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட துவங்கி உள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் நிலவிய உறைபனி, குளிரின் தாக்கம் இன்னும் சில நாட்களில் படிப்படியாக குறைந்து சீராகும்’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: