கொடைக்கானலில் அமெரிக்க நாட்டினர் ஆடிப்பாடி பொங்கல்

கொடைக்கானல், ஜன. 18: கொடைக்கானல் அருகே கோவில்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் வெளிநாட்டவர் பங்கேற்ற பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி கிராமமக்கள் மாலையணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவர்களை முருகன் கோயிலுக்கு அழைத்து சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் வெளிநாட்டவர், கிராமமக்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி பொங்கலை கொண்டாடினர். தொடர்ந்து தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி தலைமையில் உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: