×

வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்

ஒட்டன்சத்திரம், ஜன. 18: ஒட்டன்சத்திரம் அருகே தா.புதுக்கோட்டை, புதுச்சத்திரத்தை சேர்ந்த 18 பேர் காளையுடன் பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு சரக்கு வேனில் சென்றனர்.
ஜல்லிக்கட்டு முடிந்து ஊருக்கு திரும்பினர். ஒட்டன்சத்திரம்- மதுரை சாலை நீலமலைக்கோட்டை பிரிவு அருகே வந்தபோது திடீரென மாடு மிரண்டது. இதனால் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் 18 பேரும் காயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேர் திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.




Tags : Van ,
× RELATED வியட்நாமை உலுக்கிய நிதி மோசடி வழக்கு; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை