நகரத்தார் காவடி நத்தத்தை கடந்தது

நத்தம், ஜன. 18: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்தூர் பகுதிகளை சேர்ந்த நகரத்தார்கள் குன்றக்குடியில் இருந்து காவடிகள் எடுத்து பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக ஆண்டுதோறும் செல்வர். அதன்படி இந்தாண்டு கடந்த 14ம் நகரத்தார் காவடி குன்றக்குடியில் இருந்து புறப்பட்டது.நேற்று காலை நகரத்தார் காவடி நத்தம் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள வாணியர் காவடி மடத்தை அடைந்தது. அங்கு அவர் பஜனை பாடி, பானி பூஜை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பழநியை நோக்கி புறப்பட்டனர். இந்த காவடிகள் முன் கொம்புகள் ஊதி, கொட்டு முழக்கு வாத்தியங்களுடன் வேல் எடுத்து செல்லப்பட்டது. இதனை ஆங்காங்கே பொதுமக்கள் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

Advertising
Advertising

Related Stories: