×

எஸ்எம்ஆர்வி பள்ளியில் பொங்கல் விழா

நாகர்கோவில், ஜன.18: வடசேரி எஸ்எம்ஆர்வி மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் மற்றும் கலாச்சார பொங்கல் விழா நடந்தது.  விழாவுக்கு தலைமை ஆசிரியர் நாகம்மாள் தலைமை வகித்தார். அவர் புத்தரிசி இட்டு பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து வகுப்பு ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். விழாவில் வடம் இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவி களும் ஆசிரயர்களும் உற்சாகமாக கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை நாகம்மாள் செய்திருந்தார்.

குமரி மாவட்ட ஆவின் சார்பில்
ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் விற்பனை தொடக்கம்

நாகர்கோவில், ஜன.18:  குமரி மாவட்ட ஆவின் சார்பில்  ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் விற்பனை தொடக்க நிகழ்ச்சி, நாகர்கோவிலில் உள்ள  ஆவின் அலுவலகத்தில்  நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை  வகித்தார். மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட  பொதுமேலாளர் டாக்டர் தியானேஷ் பாபு வரவேற்றார்.  முதல் விற்பனையை தமிழ்நாடு  அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்  முன்னாள் எம்பி நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன்,  ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட  அவைத்தலைவர் சேவியர் மனோகரன், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன்,  சுந்தரம், சுந்தர்நாத், நாகர்கோவில் நகர செயலாளர் சந்துரு, நிர்வாகிகள்  ரயிலடி மாதவன், ரபீக், கார்மல்நகர் தனிஸ், நகர பொருளாளர் விக்ரமன், வக்கீல்  ஜெயகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிச்சாமியின் புகழை கெடுக்கும் வகையில் பொய்யான தகவலை மேத்யூ கூறி வருகிறார். அவர் பணிபுரிந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியர் கூட ஒரு குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்றவர். எடப்பாடி பழனிசாமி எந்த தவறும் செய்ய வில்லை. தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு தகவல்களை பரப்பி வரும் நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகைக்காக ₹1,000 அறிவித்தது, அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  
இதற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் துளியளவு கூட உண்மை இல்லாத சம்பவத்தை பெரிதாக்கி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார்.நேசகுமார் நன்றி கூறுகிறார்.

Tags : Pongal Festival ,SMRV School ,
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...