போலீஸ்காரரை மிரட்டியவர் கைது

ஓட்டப்பிடாரம், ஜன.18: புதியம்புத்தூர் அருகே விசாரணைக்கு சென்ற காவலரை கம்பியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதியம்புத்தூரை அடுத்துள்ள சில்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் நல்லதம்பி(28). இவர் குடிபோதையில் வீட்டிலிருந்த டிவி, பைக் மற்றும் அங்கிருந்த இதர பொருட்களை கடப்பாரை கம்பியால் அடித்து சேதப்படுத்திக் கொண்டிருப்பதாக அவரது தாய் புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸ்காரர் ராஜசேகரை, நல்லதம்பி அவதூறாக பேசி, கம்பியை காட்டி மிரட்டியுள்ளார். இதுபற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், நல்லதம்பியை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: