சூதாடிய 15 பேர் கைது

தூத்துக்குடி, ஜன.18: காசு வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குலையன்கரிசல் நடுத்தெருவில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குலையன்கரிசலை சேர்ந்த சுரேஷ் (50), வெயில்துரை (60), விஜய்ஆனந்த் (38), சிவகுமார் (36), குரு என்ற குமரகுருபரன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது.ஓட்டப்பிடாரம்: பொங்கல் மறுநாளன்று தூத்துக்குடி - மதுரை ரோட்டில் புதூர்பாண்டியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புற காட்டுப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதியம்புத்தூர் உதவி ஆய்வாளர் மாதவராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்தனர். அதில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுரேஷ்(42), செய்யது உமர்அலி(39), சவரிமுத்து(49) உள்ளிட்ட 9 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.47ஆயிரத்து 620ஐ பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: