கோவில்பட்டி பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா

கோவில்பட்டி, ஜன. 18: கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் 59வது இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிச்செல்வம் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தார். நாஞ்சில் மலர்விழி பேசினார். முதுகலை தமிழாசிரியர் ஆறுமுகக்கனி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவி தலைமையாசிரியர் மலர்விழி கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை வாசித்தார். பின்னர் மாணவ, மாணவியருக்கு புத்தகம் வழங்கப்பட்டது. மாரிசினேகா வரவேற்றார். யாஸ்மிபிரபா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மகாலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் வடிவேல், என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் செல்வம் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: