கழுகுமலையில் திமுக கொடியேற்று விழா

கழுகுமலை, ஜன.18: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கயத்தார் மேற்கு ஒன்றியம், கழுகுமலை பேரூர் திமுக சார்பாக காளவாசல் பஸ்நிலையம் அருகிலுள்ள கொடிகம்பத்தில் மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுக கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, கழுகுமலை பேரூர்செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், பேரூர் அவைத்தலைவர் கந்தசாமி, துணைச் செயலாளர் மாணிக்கம், சுப்பிரமணியன், பொருளாளர் முப்பிடாதி, வானரமுட்டி ஊராட்சி செயலாளர் மாரியப்பன், சங்கரலிங்கபுரம் சிவகுமார், வேலாயுதபுரம் ஜெயசங்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன், துணை அமைப்பாளர் மணிகண்டன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் வள்ளிநாயகம், இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துமாரி, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் துரை, வார்டு செயலாளர்கள், ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

ஆறுமுகநேரி 13வது வார்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு திமுக நகர பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். விவசாய அணி அமைப்பாளர் முருகேசன் திமுக கொடியேற்றினார். முன்னாள் நகர செயலாளர் ராஜசேகர் இனிப்பு வழங்கினார்.  நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன், ராஜகோபால், பரிமளம், லட்சுமணன், வேல்பாண்டி, சார்லஸ், சவுந்தர்ராஜ், அமலதாஸ், தர்மராஜ், சுப்பிரமணியன், தனசிங், ஜெபமணி, அருணாசலம், பன்னீர்செல்வம், ஆனந்த் பங்கேற்றனர். தெற்கு ஆத்தூரில்  நடந்தவிழாவிற்கு மேலாத்தூர் பஞ்.முன்னாள் தலைவர் சதீஷ்குமார், சின்னத்துரைபாண்டியன் முன்னிலையில் பஞ்.முன்னாள் துணைத்தலைவர் அக்பர் திமுக கொடியேற்றினார். விழாவில் முருகேசன்,  தர், மாரிமுத்து, ஸ்டீபன், அப்துல்சமது, ரஹீம் பங்கேற்றனர். அவைத்தலைவர் அன்ன

மரியான் நன்றி கூறினார்.

Related Stories: