தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தூத்துக்குடி, ஜன.18:  தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள உபமின்நிலையத்தில் நாளை 19ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை, பீச்ரோடு, தெப்பக்குளம், சிவன்கோவில்தெரு, டபுள்யூ.ஜி.சி.ரோடு, ஜார்ஜ் ரோடு, வி.இ.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள்காலனி, கே.டி.சி.நகர், சிவந்தாகுளம் மெயின்ரோடு, தாமோதரன் நகர், குறிஞ்சிநகர், சிதம்பரநகர், பிரையண்ட் நகர், சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படுகிறது. முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:முத்தையாபுரம்  துணை மின்நிலையத்தில் நாளை (19ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள்  நடைபெறவுள்ளதால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின் நகர்  பகுதி, கேம்ப்-1 சுற்றியுள்ள பகுதிகள், கேம்ப்-2, தோப்பு தெரு, வடக்கு  தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமி நகர், சவேரியர்புரம்,  துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் காலை  9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது

ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டப்பிடாரம், ஓசனூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியாபுரம் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Advertising
Advertising

திருச்செந்தூர்:  திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் நாளை (19ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், பழனியப்பபுரம் உபமின்நிலையத்தைச் சார்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதியிலும் நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிருப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும் உடன்குடி துணை மின்நிலையத்தைச் சார்ந்த உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய ஊர்களுக்கு நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபோல் கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு மற்றும் செய்துங்கநல்லூர் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Related Stories: