கழுகுமலை கோயில் தைப்பூச திருவிழா வெள்ளி யானையில் சுவாமி வீதியுலா

கழுகுமலை, ஜன.18: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச விழா கடந்த 12ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4ம் நாளன்று அதிகாலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசாந்தி பூஜைகள் நடந்தது. இரவு வெள்ளி யானையில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையும் ரதவீதியுலா வந்து செங்குந்தர் சமுதாய மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் செங்குந்தர் சமுதாய தலைவர் வேலு, செயலாளர் தங்கராஜ், பொருளாளர் முப்பிடாதி, கவுரவ ஆலோசகர் சண்முகம் உள்பட திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertising
Advertising

Related Stories: