மதுவிற்ற இருவர் கைது

தூத்துக்குடி, ஜன.18:

தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அண்ணாநகர் 3வது தெருவில் சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த அண்ணாநகரை சேர்ந்த சுந்தர்குமார்(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தாளமுத்துநகர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது லூர்தம்மாள்புரம் சந்திப்பு பகுதியில் மதுபாட்டில்கள் விற்று கொண்டிருந்த, லூர்தம்மாள்புரம் 2வது தெருவை சேர்ந்த சகாயராஜ்(52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 33 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.
Advertising
Advertising

Related Stories: