தூத்துக்குடியில் இன்று தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜன.18: தூத்துக்குடியில் இன்று தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று  18ம் தேதி காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி ஆசிரியர் காலனி, 1வது தெருவிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்க உள்ளது.

இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்களும் பங்கேற்கின்றன. முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கணினி பயிற்சி கல்வி தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம், கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம். தனியார் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்படும் போது அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. மேலும் விவரங்களுக்கு 0461- 2340159 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: