தண்டராம்பட்டு அருகே சிறுமி கொலை சம்பவம் பலாத்காரம் செய்தபோது கூச்சல் போட்டதால் கொன்றேன் கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்

தண்டராம்பட்டு, ஜன.18: தண்டராம்பட்டு அருகே சிறுமி கொலை வழக்கில் கைதான முதியவர், பலாத்காரம் செய்த போது சிறுமி கூச்சல் போட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(60), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா(55). மகள் அன்புகுமாரி(30). இவர் தனது 2வது கணவர் விஜயகுமாருடன் சாத்துமலையனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களது மகள் சீதா(10), தனது தாத்தா, பாட்டியுடன் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்த சீதாவை காணவில்லை. மறுநாள் மதியம் அதே கிராமத்தில் கரும்புத் தோட்டத்திற்கு அருகில் உள்ள புதரில் சீதா சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமி பாலியல் பலாத்காரம் ெசய்து, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, சிறுமியின் தாத்தா சேகரின் நண்பரான, அதே கிராமத்தை சேர்ந்த கணேசன்(60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் கணேசன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்ததாவது:சம்பவத்தன்று நான், சேகர் வீட்டிற்கு சென்றபோது சிறுமி சீதா மட்டும் தனியாக இருந்தார். தாத்தா, பாட்டி எங்கே என கேட்டேன். பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க கடைக்கு சென்றிருக்கின்றனர், நீங்கள் வந்தவுடன் கரும்பு தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சும்படி கூறியதாக அவள் தெரிவித்தாள்.

இதையடுத்து, சிறுமி சீதாவை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றேன். போதையில் இருந்த நான், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தேன். அப்போது, அவள் உதவி கேட்டு கூச்சல் போட்டாள். மேலும், நடந்த சம்பவத்தை வெளியே சொல்லிவிடுவாள் என பயந்த நான், சீதாவின கழுத்து நெரித்து கொலை செய்தேன். பின்னர், சடலத்தை கரும்பு தோட்டத்திற்கு அருகில் உள்ள புதரில் மறைத்து வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து, கணேசனை நேற்று முன்தினம் செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு...