திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோயில் நிர்வாகம் தகவல்

திருவண்ணாமலை, ஜன.18: திருவண்ணாமலையில் இந்த மாதம் பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தன்படி இந்த மாத(தை) பவுர்ணமி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.51 மணிக்கு தொடங்கி, மறுநாள்(திங்கட்கிழமை) மதியம் 11.41 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரமாகும்.இந்த தகவலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

× RELATED குடிநீர் பிரச்னையால் 2 மாதமாக...