சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோயிலில் பக்தோசித பெருமாள் கிரிவலம்

சோளிங்கர், ஜன. 18: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று சுவாமி கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை உற்சவ மூர்த்திகள் தேவி, பூதேவி சமேத பக்தோசித பொருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில், கிளி கூண்டு வாகனத்தில் கிரிவலம் புறப்பட்டார்.

சுப்பாராவ் வீதி, திருக்குளம், அப்பாங்கார குளம், தக்கான்குளம், யோகநரசிம்மர் நகர், கொண்டபாளையம், மலையைடிவாரம், பாண்டியநல்லூர், யோக ஆஞ்சநேயர் நகர், உடையார் பாளையம், நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள மண்டகபடியில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு கிருஷ்ணாவரத்தில் உள்ள ஏகாதசி மண்டபத்திற்கு சுவாமி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ேசஷவாகனத்தில் துவாதசி மண்டபத்திற்கு சென்றார். அங்கிருந்து மீண்டும் கிளிகூண்டு வாகனத்தில் ராமாபுரம், புலிவலம், நந்திமங்கலம், கட்டாரிகுப்பம், கொடைக்கல், புத்தேரி, பத்மாபுரம் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: