வாலாஜா அருேக வீட்டின் வெளியே தூங்கிய போது திருட்டு மணல் லாரி கவிழ்ந்து விவசாயி பலி

* டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் * போலீசாருடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

வாலாஜா, ஜன. 18: வாலாஜா அருகே வீட்டின் வெளியே தூங்கிய விவசாயி மீது திருட்டு மணல் லாரி கவிழ்ந்ததில் அவர் பலியானார். டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வாலாஜா அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(32), விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தார்.நள்ளிரவு நேரத்தில் அவ்வழியாக வந்த திருட்டு மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ராதாகிருஷ்ணன் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டு கூச்சலிட்டார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த ராதாகிருஷ்ணனுக்கு யமுனாநிதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். தொடர்ந்து, நேற்று மாலை 3 மணியளவில் ராதாகிருஷ்ணன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்ற லாரி டிரைவரை கைதுசெய்ய வலியுறுத்தி தென்கடப்பந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, திருட்டு மணலை தடுக்கவேண்டும், இறந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு ேவலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தகவலறிந்த ஏடிஎஸ்பி ஆசைத்தம்பி, டிஎஸ்பிக்கள் கலைச்செல்வம், ராதாகிருஷ்ணன், துரைமாணிக்கம், இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் தாசில்தார் பூமா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால், தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக கூறினர். இதனால் 2 மணி நேரமாக சென்னை மற்றும் -பெங்களூரு மார்க்கமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது. இதனால் வெளியூர் செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். தொடர்ந்து, போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துசெல்லும்படி கூறினர். இல்லையென்றால் கைது மற்றும் தடியடி நடத்தப்படும் என எச்சரித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் சாலை மறியலை ைகவிட்டனர்.

=====================

Related Stories: