×

திருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது

திருவள்ளூர், ஜன. 18: திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அரசின் உத்தரவை மீறி திருவள்ளுவர் தினத்தன்று சட்ட விரோதமாக மது விற்ற 8 பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து, 638 குவார்ட்டர் மது பாட்டில்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர்.தமிழ்நாட்டில் சுதந்திர தினம், குடியரசு தினம், திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, மிலாடி நபி உள்ளிட்ட சில நாட்களில் மது விற்பனையை முற்றிலுமாக அரசு தடை செய்துள்ளது. இந்த நாட்களில் மதுக்கடைகளை மூட  வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் சார்பில் முன் கூட்டியே அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.இதுபோன்ற நாட்களில், முதல் நாளிலேயே அருகிலுள்ள மதுக்கடைகளில் ஏராளமான மதுபானங்களை அதிகம் வாங்கி, ‘ஸ்டாக்’’’’ வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாகிவிட்டது.

திருவள்ளுவர் தினமான நேற்று குவாட்டருக்கு ₹30லிருந்து ₹40 வரையும், முழு பாட்டிலுக்கு ₹100லிருந்து ₹150 வரையிலும் அதிக விலை வைத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை நடப்பதாக எஸ்.பி.,  பொன்னிக்கு தகவல் வந்தது.அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 8 பெண்கள் உள்பட 37  பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 638 குவார்ட்டர் பாட்டில்களையும், ஒரு ஆட்டோ, 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.  

Tags : Thiruvalluvar ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி