×

காணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி

திருவள்ளூர், ஜன. 18: தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில், பொங்கல் விழாவும், இரண்டாவது நாளில், மாட்டு பொங்கல், மூன்றாவது நாளில் காணும்பொங்கல் என ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக பூண்டி நீர்த்தேக்கம், பழவேற்காடு ஆகியவை உள்ளன.அதுமட்டுமில்லாமல் திருத்தணி, பெரியபாளையம், திருவள்ளூர், சிறுவாபுரி உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபடுவர். குறிப்பாக பூண்டி நீர்த்தேக்கத்தில் காணும்பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும்  ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து குவிவர்.

நேற்று காணும்பொங்கலை ஒட்டி, பூண்டி நீர்த்தேக்தத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர் என 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சொற்ப சுற்றுலா  பயணிகள் மற்றும் மக்கள் வந்திருந்ததால் அப்பகுதி களையிழந்து காணப்பட்டது. அதிலும் வந்திருந்த சொற்ப பயணிகளையும் அங்கு சுற்றித்திருந்த ஏராளமான குரங்குகள் விரட்டி அடித்தன. சிலரது பைகளையும், கையில்  வைத்திருந்த பொருட்களையும் பறித்து சென்றன. இதனால் பொழுதுபோக்குக்காக வந்த பொதுமக்கள் பயந்து மன உளைச்சலுடன் திரும்பி சென்றனர்.

Tags : festival ,Pondicherry ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...