×

பஸ் விபத்தில் காயமடைந்த தாய், மகளுக்கு 5 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவு


சென்னை: பஸ் மோதி விபத்தில் காயமடைந்த சென்னையை சேர்ந்த தாய், மகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வி. இவர், கடந்த 2013ம் ஆண்டு திருச்சி பாலூர் அருகே தனியார் பேருந்தில் தனது மகள் வள்ளிநாயகியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்துக்கு எதிரே  தமிழ்நாடு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, செல்வி மற்றும் வள்ளிநாயகி சென்ற பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில்  இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து தாய், மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் செல்விக்கு 3 பற்கள் உடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வள்ளிநாயகிக்கும் காயம்  ஏற்பட்டிருந்தது.

திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் செல்வி, வள்ளிநாயகி இருவரும் இழப்பீடு கோரி தனித்தனியே சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஐயப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, செல்வி டெய்லராக இருப்பதாகவும், வள்ளிநாயகி ஆடிட்டரின் உதவியாளராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். விபத்திற்கு பின்பு இருவரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்விக்கு 3 பற்கள்  உடைந்து மருத்துவ செலவும் செய்துள்ளார். எனவே செல்விக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரமும், வள்ளிநாயகிக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரமும் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநகர விரைவு பேருந்து நிர்வாக இயக்குனருக்கு  உத்தரவிட்டார்.

Tags : bus accident ,
× RELATED குன்னூர் பேருந்து விபத்து...