ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்: போரூரில் கமிஷனர் விஸ்வநாதன் பங்கேற்பு

சென்னை:  பொங்கல் பண்டிகையை சென்னை போலீசார் காவல்துறை குடும்பங்கள், காவல் சிறார் மன்றம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள்.இதுபோல, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் காலை போரூரிலுள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று சிறுவர், சிறுமிகளுடன் பொங்கல் கொண்டாடினார். அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும்  தேவையான பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண், போக்குவரத்து இணை ஆணையர்கள் சுதாகர், நஜ்மல் ஹேடா, மேற்கு மண்டல இணை ஆணையர்  விஜயகுமாரி, போக்குவரத்து காவல் துணை ஆணையர் பகலவன், போக்குவரத்து தெற்கு ஆணையர் சாமிநாதன், உதவி ஆணையாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண் தலைமையில் முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களிலும் பொங்கல் விழா கொண்டாடி பரிசு, புத்தாடைகள் வழங்கினர். நீலாங்கரையில் உள்ள  முதியோர் இல்லத்தில் போக்குவரத்து உதவி கமிஷனர் ஜெயசரண், இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ ஆனந்தராஜ் ஆகியோர் பொங்கல் கொண்டாடினர்.போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் சென்னையில் 10 முதியோர் இல்லம், 25 ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திலும் போலீசார் சார்பில் பொங்கல்  பண்டிகை கொண்டாடப்பட்டது.

 இதுபற்றி ஆதரவற்ற, காப்பக குழந்தைகள் கூறுகையில், ‘எங்களை பார்க்க உறவினர்கள் யாரும் வராத நிலையில் போலீசார் சார்பில் எங்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வருட  பொங்கலை எங்களால் மறக்க முடியாது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம் என்றனர். காவல்துறை சார்பில் சென்னையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும்  அதிகரித்துள்ளது.  

Related Stories: