சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் 16ம் தேதி திறப்பு

சேலம், ஜன.11:  சேலம் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன் உள்பட பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், ெதாண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் பேசியதாவது:

சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் திறப்பு விழா வரும் 16ம் தேதி காலை நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 13ம் தேதி சேலம் வருகை தருகிறார்.

அன்று காலை காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். பின்னர் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துக்கிறார். சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் திறப்பு விழா 16ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. இதில் முதல்வர்  கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அரியானூர், மகுடஞ்சாவடியில் மேம்பாலம் அமைக்க பூமிபூஜை போடுகிறார். விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

Related Stories: