ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு

ஆத்தூர், ஜன.11: ஆத்தூர் கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை செயல்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.  சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமல்படுத்துவதற்கான பயிற்சி ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியை பள்ளி தலைமையாசிரியை பிரசன்னவதனி துவக்கி வைத்தார்.

சென்னையில் நடந்த மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொண்ட தாண்டவராயபுரம் பள்ளி கணினி பயிற்றுனர் ரமேஷ், மஞ்சினி பள்ளி கணினி பயிற்றுனர் முருகன் ஆகியோர் ஆத்து£ர் கல்வி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துவது குறித்த பயிற்சியை அளித்தனர். மேலும் பயோமெட்ரிக் கருவியை நிறுவுவதற்கு தேவையான கணினி, இணையம், யூபிஎஸ் போன்ற சாதனங்கள் பற்றியும் விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சியின் முடிவில் ஆத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு சாதனங்கள் வழங்கப்பட்டன. ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு தர்ணா