சென்னை, கோவைக்கு 53 புதிய அரசு பஸ்கள்

சேலம், ஜன.11:  சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 53 புதிய பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வைக்கப்பட்டது.
சேலம் போக்குவரத்து கோட்டத்திற்கு 112 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டது. இதில் 53 பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ரோகிணி கொடியசைத்து இயக்கி வைத்தார். இப்புதிய பஸ்கள், சேலத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், சேலம் எம்பி பன்னீர்செல்வம், கள்ளக்குறிச்சி எம்பி  காமராஜ், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல், செம்மலை, மனோன்மணி, ராஜா,  வெற்றிவேல், சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் அரவிந்த், துணை இயக்குநர்கள் ஜெயக்குமார், சின்னசாமி, குமார், ஜீவரத்தினம், கலைவாணன், லட்சுமண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

× RELATED கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை