உதவித்தொகை பெற்றுத்தருவதாக மூதாட்டியிடம் மோசடி

ஆத்தூர், ஜன.11: ஆத்தூர் ராணிப்பேட்டை சவுரிமுத்து தெருவை சேர்ந்தவர் சிவகாமி (65). இவர் நேற்று வீட்டின் முன் அமர்ந்து இருந்தார். அப்போது டிப்டாப் உடையணிந்து வந்த வாலிபர் ஒருவர், முதியோர் உதவித்தொகை வழங்குவது தொடர்பாக முகவரி விசாரிக்க வந்துள்ளேன் என கூறினார். இதை நம்பிய சிவகாமி, அந்த வாலிபரிடம் தனக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு பணம் செலவாகும் என கூறியுள்ளார். சிவகாமி தான் சேமித்து வைத்துள்ள பணத்தை தருவதாக கூறியதையடுத்து, அந்த வாலிபர் விண்ணப்பங்களை நிரப்புவது போல் நடித்து, சிவகாமியிடம் ₹3 ஆயிரம் வசூலித்தார். அதன்பின் போட்டோ வேண்டும் என வாலிபர் கேட்க, அதை எடுக்க சிவகாமி வீட்டிற்குள் சென்றபோது, அந்த வாலிபர் மாயமாகி விட்டார். அவரை எங்கும் காணாததால் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மோசடியில் ஈடுபட்ட வாலிபர் குறித்து விசாரிக்கின்றனர்.

× RELATED மூணாறு அருகே ஆன்லைன் மோசடி சின்னமனூர் அருகே சிதைந்து கிடக்கும் தடுப்பணை