மேட்டூரில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மேட்டூர், ஜன.11: பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி மேட்டூரில் நேற்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் துவங்கிய இப்பேரணியை மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரியில் இருந்து தொடங்கி மாதா கோயில், பஸ் நிலையம், சதுரங்காடி, கிழக்கு நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் மது விலக்கு தொடர்பான கலை நிகழ்ச்சிகளை, மாணவ, மாணவியர் செய்து காண்பித்தனர்.

× RELATED விழிப்புணர்வு பேரணி