திமுக அலுவலகத்தில் நாளை சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல், ஜன.11:நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல்  கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நாளை (12ம் தேதி) காலை 9 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதில் மாநில,  மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அனைவரும்  கலந்து கொள்ள வேண்டும். நாமக்கல் நகர திமுக சார்பில், வரும் 13ம் தேதி  காலை 6 மணிக்கு நாமக்கல், ஜெட்டிக்குளத்தெரு, மதுரைவீரன் கோயில் அருகில்  மகளிருக்கான இறுதி கோலப்போட்டி நடைபெறுகிறது. இதில், நாமக்கல்  நகரத்திற்குட்பட்ட வார்டுகளில் நடத்தப்பட்ட மகளிருக்கான கோலப்போட்டிகளில்  முதல் பரிசு பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். இறுதி போட்டியில்  வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்கம், மற்றவர்களுக்கு  ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

× RELATED திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா