₹1.24 கோடி மதிப்பில் சேந்தமங்கலம்-காரவள்ளி சாலை விரிவாக்க பணி

சேந்தமங்கலம்,  ஜன.11: சேந்தமங்கலம் காரவள்ளி சாலையை ₹1.24 கோடி மதிப்பில் விரிவாக்கம்  செய்யும் பணியை எம்எல்ஏ சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். சேந்தமங்கலம் காந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரம்புதூர் வழியாக  காரவள்ளி சாலை, சுமார் 2 கி.மீ தொலைவிற்கு குறுகலாக உள்ளதால், ராமநாதபுரம்  பகுதியில் வாகனங்கள் சென்றுவர சிரமமாக இருந்து வந்தது. இதனை அகலப்படுத்த,  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மூலம்  சாலையை அகலப்படுத்த ₹1.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான  பூமிபூஜைக்கு உதவி கோட்டப்பொறியாளர் செல்வராஜ்  தலைமை தாங்கினார். இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு,  பணியை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து ரேஷன்  கடையில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

இதில், ராமநாதபுரம்புதூர் பூங்கா நகர் பகுதியில் ₹5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கித்தலைவர் பழனிமுத்து, உதவி செயற்பொறியாளர் குமரேசன், வக்கீல்  சசிக்குமார், துணைத்தலைவர் எட்டிக்கண், நிர்வாகிகள் தண்டபாணி, அண்ணாதுரை,  பாலசுப்ரமணி, அண்ணமார் சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED ராசிபுரம் நகராட்சியின் குப்பை கொட்டும் இடமாக மாறிய தட்டான்குட்டை ஏரி