×

இலுப்புலியில் ஆடு வளர்ப்பு பயிற்சி

திருச்செங்கோடு, ஜன.11:  எலச்சிப்பாளையம் ஒன்றியம் இலுப்புலி ஊராட்சியில், அரசின் விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 144 பயனாளிகளுக்கு, சந்தையில் ஆடு வாங்குவது, வளர்ப்பது, அரசு விதிமுறைகள், திட்ட நோக்கம் குறித்து முதற்கட்ட பயிற்சி, இலுப்புலி மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. சந்தையில் நல்ல ஆரோக்கியமான ஆட்டு குட்டிகள் எவ்வாறு கண்டறிந்து வாங்குவது, நோய் அறிகுறிகள் கண்டறிவது, தீவன மேலாண்மை முறைகள், குளிர்கால பராமரிப்பு முறைகள் பற்றி கால்நடை மருத்துவர் குமரவேல் மற்றும் ராஜா ஆகியோர் விளக்கம் அளித்தனர். திட்ட செயலாக்கம் குறித்து டாக்டர் பாலாஜி எடுத்துரைத்தார். பொங்கல் பண்டிகை முடிந்து திருச்செங்கோடு மற்றும் மோர்பாளையம் சந்தைகளில் ஆடுகள் வாங்கிக் கொள்வதாக பயனாளிகள் விருப்பம் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்