×

பரமத்திவேலூரில் கொப்பரை ஏலம்

பரமத்திவேலூர், ஜன.11:பரமத்திவேலூர் அடுத்த வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. பரமத்தி, கபிலர்மலை, ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 1,803 கிலோ கொப்பரை தேங்காயை, ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல்லை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில் கொப்பரை கிலோ ₹118.10 முதல் ₹112.89 வரை விற்பனையானது. நேற்றைய ஏலத்தில் கிலோ ₹119.12 முதல் ₹108.90 வரையும், சராசரி விலையாக ₹117.12க்கும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக, 1,803 கிலோ கொப்பரை ₹1.83 லட்சத்துக்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, நேற்று கொப்பரை விலை கணிசமாக உயர்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Copper auction ,
× RELATED முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.91 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்