கூட்டுறவு சங்கத்தில் எடைபோட தாமதம் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

நாமக்கல், ஜன.11: பருத்தி மூட்டைகளை எடை போட தாமதம் ஆனதால்,  வேளாண் கூட்டுறவு சங்கம் முன், நேற்று இரவு விவசாயிகள் திடீர் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 8300 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். வழக்கமாக பருத்தி மூட்டைகளை ஏலத்தில் எடுக்க வரும் வியாபாரிகள், பருத்திக்கான விலையை கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் குறித்து கொடுப்பார்கள்.  அதிக விலையை குறித்து கொடுத்த வியாபாரிகளுக்கு, பருத்தி விற்பனை செய்யப்படும். பருத்தியின் ரகத்துக்கு ஏற்ப வியாபாரிகள் தெரிவித்த விலை விபரம், வாரம்தோறும் மதியம் 3 மணிக்கு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

ஆனால், நேற்று இரவு 6 மணி ஆகியும், பருத்தி மூட்டைகளை அலுவலர்கள் எடை போடவில்லை. விலை விபரமும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ேடார், சங்கத்துக்கு வெளியே வந்து நாமக்கல் -திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது, இன்று (11ம்தேதி) காலை 8 மணிக்கு பருத்தி மூட்டைகளை எடை போட்டு, அதற்குரிய பணம் விவசாயிகளுக்கு  வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு, விவசாயிகள்  அங்கிருந்து கலைந்து சென்றனர். வழக்கமாக பருத்தி மூட்டைகளை ஏலத்தில் எடுக்க வரும் வியாபாரிகள், பருத்திக்கான விலையை கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் குறித்து கொடுப்பார்கள்.  அதிக விலையை குறித்து கொடுத்த வியாபாரிகளுக்கு, பருத்தி விற்பனை செய்யப்படும்.

× RELATED போதிய நீர் இல்லாததால் பாதியாக...