கொல்லிமலையில் தம்பி மனைவியை தாக்கிய விவசாயி அதிரடி கைது

சேந்தமங்கலம், ஜன.11:   ெகால்லிமலையில் நிலத்தகராறில் தம்பி மனைவியை உருட்டு கட்டையால் தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல்  மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பெருமாபட்டி காலணியை சேர்ந்த விவசாயி  செல்வராஜ்(45). இவரது தம்பி சீரங்கன்(40). இவர்களுக்கு சொந்தமான 3  ஏக்கர் நிலத்தை பிரித்து கொண்டதில் இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சீரங்கனின் மனைவி  செல்வமணி(37), தங்களது நிலத்திற்கு செல்ல, செல்வராஜ் நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த செல்வராஜ், சீரங்கன் வீட்டிற்கு  சென்று தகராறில் ஈடுபட்டதுடன், உருட்டு கட்டையால் செல்வமணியை  சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட செல்வமணியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு,  செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சீரங்கன் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய வாழவந்திநாடு எஸ்ஐ மணி, வழக்குபதிவு செய்து செல்வராஜை நேற்று கைது  செய்துள்ளார்.  

× RELATED விவசாயிக்கு அரிவாள் வெட்டு