இருவேறு சாலை விபத்தில் மூதாட்டி உள்பட 2பேர் பலி

சேந்தமங்கலம், ஜன.11:  ராசிபுரம் அடுத்துள்ள பட்டணத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வீரம்மாள்(60). இவர் புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், ஊழியராக வேலை செய்து வந்தார்.  நேற்று முன்தினம் இரவு, பாச்சல் அருகே, நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில், தூக்கி வீசப்பட்ட வீரம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுச்சத்திரம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், பேளுக்குறிச்சி அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் கணபதி(69).  

இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது, ஓணான்கரடு பகுதியில் பின்னால் வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலே கணபதி உயிரிழந்தார். விபத்து குறித்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED வேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம்