போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்

நாமக்கல், ஜன.11:  நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செ யற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயன கழிவு பொருட்கள் ஆகியவற்றை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. அப்போது வெளியேறும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளும் நேரிடுகிறது.  எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

× RELATED அமெரிக்காவிலிருந்து இறக்குமதி...