தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நாமகிரிப்பேட்டை,ஜன.11: நாமகிரிப்பேட்டை அடுத்த தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு வாசககங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர்.
 இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் பழனிவேல், ஆசிரியர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மதுரம், முதுகலை ஆசிரியர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் சதீஷ், ஓவிய ஆசிரியர் சுந்தர்ராஜன் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

× RELATED காவேரிப்பட்டணத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி