மண்வள அட்டை இயக்கம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, ஜன.11:  கிருஷ்ணகிரியில் மண்வள அட்டை இயக்கம் திட்டத்தில், முதன்மை கிராம விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் மண்வள அட்டை இயக்கம் திட்டத்தில், முதன்மை கிராம விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது மண் சேகரிப்பு, மண் ஆய்வு செய்தல், பரிந்துரை செய்யும் உரம் விபரம், மண்ணின் முக்கியத்துவம், மண்வள அட்டை பயன்படுத்தும் விபரம், மண்ணில் உள்ள சத்துக்கள் விபரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பிரதீப்குமார் சிங், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக மண்டல ஆராய்ச்சி நிலைய வேளாண்மை விஞ்ஞானி விஜயகுமார், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய மண்ணியல் விஞ்ஞானி குணசேகரன், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) பச்சையப்பன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
 
பயிற்சியின் போது அவர்கள் கூறியதாவது:
கிராம வரைபடத்தை கொண்டு, 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரி (இறவைப் பயிற்சி), 10 எக்டருக்கு ஒரு மண் மாதிரி (மானாவாரி பயிர்) வேளண்மை துறை களப்பணியாளர்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு, மண் ஆய்வு கூடம் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டு, பயிருக்கு ஏற்ற உரப்பரிந்துரை செய்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாக இதுவரை ஒரு லட்சத்து 25,100 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே முறைப்படி நடப்பு ஆண்டில் (2018-19ம் ஆண்டு) 18,650 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டின் முன்னோடி கிராம திட்டம் மூலமாக பையூர், கட்டிகானப்பள்ளி, பெத்தம்பட்டி ஆகிய 3 வருவாய் கிராமத்தை தேர்ந்தெடுத்து 252 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, முடிவிற்கேற்ப உரப்பரிந்துரைகளுடன் மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேசிய மண்வள அட்டை இயக்கம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்வள அட்டைகளின் அடிப்படையிலேயே அனைத்து உரங்களும் வினியோகம் செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.   

× RELATED கிழக்கு மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்