போச்சம்பள்ளி அருகே டெம்போ மோதியதில் 2 ஆக பிளந்த பனைமரம் விபத்து ஏற்படும் அபாயம்

போச்சம்பள்ளி, ஜன.11:  போச்சம்பள்ளி அருகே புலியூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் வழியில் ஏராளமான மரங்கள் சாலையோரம் உள்ளன. அதில் பல மரங்கள் காய்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், புலியூரில் இருந்து கோட்டப்பட்டி செல்லும் குறுக்கிய சாலையில் பனைமரங்கள் வளர்ந்து உள்ளது. மேலும், மரங்கள் சாலையை மறைத்துள்ளதால், முன்னே வரும் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஊத்தங்கரையில் இருந்து புலியூர் நோக்கி வந்த டெம்போ சாலையோர பனை மரத்தில் மோதியதில் மரம் 2 ஆக பிளந்து காணப்படுகிறது. இது எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் புலவர் கிருஷ்ணன், பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, விபத்து ஏற்படும் முன் இரண்டாக பிளந்த நிலையில் உள்ள பனைமரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்

× RELATED தூள்செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றுநீரை கொண்டு வர வேண்டும்