ராயக்கோட்டையில் கர்ணல் முனீஸ்வரர் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி, ஜன.11: ராயக்கோட்டை-ஓசூர் ரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள கர்ணல் முனீஸ்வரர் கோயில், 50வது ஆண்டு முப்பூஜை திருவிழா, மகா கணபதி ஹோமம், பாலசண்டி ஹோமம், லட்சுமி துர்கை நவகிரக ஹோமங்களுடன்  நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை முப்பூஜை நடந்தது. அப்போது ஆடு, கோழி, பன்றி பலி கொடுக்கப்பட்டது. கோயில் பூசாரி சுந்தரேச பிள்ளை ஆடு மற்றும் கோழியை கடித்து ரத்தம் குடித்தார். இதை ெதாடர்ந்து ஏராளமான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் கர்நாடக மற்றும் ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

× RELATED ராயக்கோட்டையில் மகாபாரத கோயில் திருவிழா