மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணி


ஓசூர், ஜன.11:  ஓசூரில் மது விலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஓசூர் ஆர்வி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கிருஷ்ணகிரி மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில், சாராயம் மற்றும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஓசூர் ஆர்டிஓ விமல்ராஜ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி உதவி ஆணையர்(ஆயம்) முரளி முன்னிலை வகித்தார். பேரணியில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதுவிலக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

இந்த பேரணியில் ஓசூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி, செயின்ட்ஜோசப் ஐடிஐ, மகரிஷி வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களை சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகள், ஓசூர் கோட்ட ஆய அலுவலர் பெருமாள், ஓசூர் தாசில்தார் முத்துபாண்டி, ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், கலால் எஸ்ஐ ராமு, ஆய மேல்நிலை வருவாய் ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், தீர்த்தகிரி, சமூகஆர்வலர் ராதா ஆகியோர் கலந்து கொண்டன

× RELATED கிழக்கு மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்