அஞ்செட்டி அருகே சீரான குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

தேன்கனிக்கோட்டை, ஜன.11: அஞ்செட்டி தாலுகா தக்கட்டி ஊராட்சி பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த ஓராண்டாக இந்த கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகத்தில் ெதாய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினிரிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று, குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி, 40க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தில், குடிநீர் பிரச்னையை சரி செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்,’ என்றனர். .

× RELATED குடிநீர் வழங்க வலியுறுத்தி...