விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

வேப்பனஹள்ளி, ஜன.11:  வேப்பனஹள்ளியில், நேற்று முன்தினம் போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த 20 வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாமல் வந்த 15 வாகன ஓட்டிகள், சிக்னலில் நிற்காமல் வந்த 10 பேர் என மொத்தம் 45 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

× RELATED தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை...