காமன்தொட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்

சூளகிரி, ஜன.11: சூளகிரி தாலுகா காமன்தொட்டி கிராமத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஓசூர் ஆர்டிஓ விமல்ராஜ் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 26 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர், வங்கி கடன் வழங்க மனுக்களையும் பெற்றுக்கொண்டு கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை, பிரசவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை பெற்று மாற்றுத்திறனாளிகள் பயனடைய வேண்டும் என்றார். முகாமில், சூளகிரி தாசில்தார் மிருணாளினி, சிறப்பு தாசில்தார் ரெஜினா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் மோகனா, வருவாய் அலுவலர் முருகன், கிராம அலுவலர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி பயிற்சி மையம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்