மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

கிருஷ்ணகிரி, ஜன.11:   கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் உண்டியல், ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படுவது வழக்கம். நேற்று காலை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில், கோயிலில் வைக்கப்பட்டிருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இப்பணியில் அரசு பள்ளி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ₹11 லட்சத்து 76,690 ரொக்கம், 150 கிராம் தங்கம், 170 கிராம் வெள்ளி இருந்தது. இந்த பணியின் போது, தக்கார் திருஞானசம்பந்தர், செயல் அலுவலர் அமுதசுரபி, ஆய்வாளர்கள் சத்யா, வளர்மதி, கோவிந்தராஜ் மற்றும் பணியாளர்கள், திருக்கோயில் அறங்காவலர்கள் உடனிருந்தனர். மேலும், கிருஷ்ணகிரி டிஎஸ்பி கண்ணன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

× RELATED திருவெண்காட்டில் புதிய நூலகம் திறப்பு