செயல்திறன் ஊக்கத்தொகை ரூ.1,000 வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

தஞ்சை, ஜன. 11: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு செயல்திறன் ஊக்கத்தொகை ரூ.1,000மாக உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 21 மண்டலங்கள் இயங்கி வருகிறது. 21 போக்குவரத்து கழகங்களிலும் 1.57 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவுக்கு முன்னதாக ஆப்சென்ட் இன்றி பணிபுரியும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்துகிற வகையில் செயல்திறன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் செயல் திறன் ஊக்கத்தொகை அரசால் அறிவிக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கான கரும்பு, வாழை உள்ளிட்ட அவசிய பொருட்கள் வாங்க உதவியாக உடனடியாக தொகையை வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக ரூ.625 மட்டும் வழங்கப்பட்டு வருவதை தற்போதுள்ள விலைவாசி உயர்வை கணக்கிட்டு குறைந்தபட்சம் ரூபாய் ரூ.1000மாக செயல் திறன் ஊக்கத்தொகையை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாநில துணை பொது செயலாளர் துரை.மதிவாணன்

தெரிவித்துள்ளார்.

Related Stories: