அசூர் கிராமத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கும்பகோணம்,ஜன.11: அசூர் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.கும்பகோணம் தாசில்தார் ஜானகிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் அடுத்த அசூர் கிராமத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு, இறப்புகான சான்றுகளுக்கான மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுத்து உடடினயாக தீர்வு காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED கிராம மக்கள் சாலை மறியல்